Pongal 2024 Karur Vennaimalai Private College Celebrated Pongal Festival – TNN

கரூர் வெண்ணைமலை தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய உடை அணிந்து திரைப்பட பாடலுக்கு ஏற்ப கல்லூரி மாணவ,மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினார்கள்.
 

சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையிl கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 
 

விழாவில் கல்லூரி மாணவ,மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடையான மாணவர்கள் வேஷ்டி, சட்டைகள் அணிந்தும் மாணவிகள் சேலை அணிந்து அனைவரும் ஒற்றுமையாக புத்தம் புதிய மண்பானையில் பொங்கல் வைத்து கரும்புகள் கொண்டு வழிபாடு செய்தனர்.
 

பின்னர் வளாகத்தில் அனைத்து மாணவிகளும் ஒன்று சேர்ந்து கும்மியாட்டம் மற்றும் தமிழ் திரைப்பட பல்வேறு பாடல்களுக்கு இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர். ஒரு சிலர் குழுவாக இணைந்து நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 

Source link