Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here | TN Headlines: சென்னை வரும் ஜே.பி.நட்டா; பாஜகவுடன் கூட்டணி இல்லை



உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிசாமி உறுதி!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியவை..பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். மேலும் படிக்க

J.P.Nadda: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! இன்று சென்னை வரும் ஜே.பி.நட்டா – ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை கவரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி இராமநாதபுரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை தொடங்கினார். அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக யாத்திரை சென்ற அண்ணாமலைக்கு செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. மேலும் படிக்க

CUET PG 2024: க்யூட் முதுநிலைத் தேர்வு விண்ணப்பத்தில் பிப்.13 வரை திருத்தம் செய்யலாம்; எந்த தகவலில்? எப்படி?

மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க

MP Kanimozhi: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்கிறது – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்டு கூட்டம் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க

5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள் – அமைச்சர் விளக்கம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது உள்ளது. மேலும் படிக்க
 
 
 
 

மேலும் காண

Source link