7 Am Headlines today 2024 april 13th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல்.
தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு.
அரியலூர் அருகே செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 24 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைப்பு.
மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்.
கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.
 ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்கிறேன் – நெல்லையில் மனம் திறந்த ராகுல் காந்தி
எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம், தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன் – சீமான்
தமிழகத்தில் இன்று ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இந்தியா: 

மோடிக்கு தோசை பிடிக்குமா இல்லை, வடை பிடிக்குமாங்கிறது தமிழர்களுக்கு பிரச்னை இல்லை – ராகுல் காந்தி சரமாரி கேள்வி
கிளாக்கோமா நோயால் இந்தியாவில் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கே விட்டுவிடுகிறோம் என நெல்லை பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். 
எமர்ஜென்சி காலத்தில் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பரோல் கூட கிடைக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு மாற தங்களின் முன் அனுமதி தேவை என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்: 

பயங்கரவாதிகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது இஸ்ரேல்.
வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் – வாடிகன் அறிவிப்பு.
காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 2 பேர் உயிரிழப்பு. 

விளையாட்டு: 

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று பலப்பரீட்சை.
ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 
பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் இந்திய குழுவின் தலைவர் பதவியை பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ராஜினாமா செய்துள்ளார்.
வெற்றியை விடவும் நேர்மையாக விளையாடுவதுதான் முக்கியம் என இளம் வீரர்களிடம் தோனி கூறியதாக மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

Published at : 13 Apr 2024 07:03 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link