விசிக சட்டமன்ற உறுப்பினருக்கு வந்த சிக்கல்..! பொருட்படுத்தாதீர்கள் என எம்எல்ஏ விளக்கம்..!

ஆன்லைன் மோசடிகள்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக நடைபெறும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நூதன வழியில் நடைபெறும் ஆன்லைன் மோசடியால் பல தரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகிறது. ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் தொடங்கி உச்ச அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை.
எம்.எல்.ஏ. பெயரில் மோசடி:இந்தநிலையில் தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும், அரசியல் பிரமுகர்கள் இவரும் ஒருவர். சாதாரண தொண்டருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை கூட சமூக வலைதளத்தில், பதிவேற்றுவதால் அவருக்கு தனி ரசிகர் கூட்டம் சமூக வலைதளத்தில் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முதல் அவரவருடைய பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு , பலருக்கு நட்பு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று வாட்ஸ் அப்பிலும் அவரது புகைப்படம் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட சில எண்களில் இருந்து பணம் கேட்டு வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் விளக்கம்
முதலில் இதுதொடர்பாக எஸ். எஸ். பாலாஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இவை அனைத்தும் போலியானது என பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ” தோழர்களுக்கு ஒரு அவசர செய்தி எனது பெயரில் வாடஸ் பல பில் “76314 48237” என்கிற எண்ணில் இருந்தோ அல்லது 8052980169 என்கிற எண்ணுக்கு பணம் அனுப்ப சொல்லி மெசேஜ்கள் வருவதாக அறிகிறேன். தயவு செய்து அதனை பொருட்படுத்தாதீர்கள் ” என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்கு மோசடி
இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இந்த மோசடி நடைபெற்று இருக்கலாம் அல்லது தங்கள் நண்பர்களுக்கு இதே விதமான மோசடிகள் நடைபெற்று இருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. முகநூலில் பப்ளிக்கில் ( PUBLIC ) உள்ள, கணக்குகளில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து, அதே பெயரில் மற்றொரு முகநூல் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் அனைவருக்கும் நட்பு அழைப்பு கொடுப்பார்கள். நாமும் நமக்கு தெரிந்தவர்தான் நட்பு அழைப்பு தருகிறார். அவருடைய பழைய அக்கவுண்ட் முடக்கப்பட்டதால், இப்படி நடந்திருக்கலாம் என அக்சப்ட் ( accept ) செய்வோம்.
நாம் அக்சப்ட் செய்த அடுத்த சில நிமிடங்களில், அந்த அக்கவுண்டில் இருந்து நமக்கு மெசேஜ் வரும். நான் வெளியில் சொல்ல இயலாத துன்பத்தில் இருக்கிறேன் அல்லது எனது உறவினர்களுக்கோ, அம்மா, அப்பாவிற்கு நெருங்கியவருக்கு உடல்நிலை சரியில்லை. என்னுடைய பழைய தொலைபேசி தொலைந்து விட்டது. என ஏதாவது ஒரு கதையை கூறி நம்மிடம் பணத்தைக் கேட்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை இல்லை என்றாலும் இருக்கும் தொகையை அனுப்புமாறு நம்மிடம் கேட்டு பணத்தை பெற்றுக் கொள்வார்கள். அதன் பிறகு அந்த ஐடி ஒரு குறிப்பிடத் தொகையை மக்களிடம் ஏமாற்றி பெற்றுக் கொண்டு  கிளம்பி விடும். இது போன்ற சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசியல்வாதி முதல் அதிகாரி வரை
இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் அரசின் மதிப்பு தக்க பதவியில் இருப்பவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக பல புகார்களும் தரப்பட்டாலும், அதில் குறைந்த அளவு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Source link