Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe


இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
புதிய பிரச்சாரத்தை கையில் எடுத்த பாஜக:
அதே சமயம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க INDIA கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பிகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் INDIA கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, குடும்ப அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பதில் அளித்தார். “நரேந்திர மோடிக்கு குடும்பம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும்?
ராமர் கோவிலை பற்றி பெருமையாக கூறி வருகிறார். அவர் உண்மையான இந்துவும் இல்லை. இந்து பாரம்பரியத்தில், ஒரு மகன் தனது பெற்றோர் இறந்த பிறகு தலையில் மொட்டையடிக்க வேண்டும். தாடியை எடுக்க வேண்டும். ஆனால், அம்மா இறந்தபோது மோடி அவ்வாறு செய்யவில்லை” என்றார்.
லாலு போட்ட செல்ப் கோல்:
குடும்பம் எதுவும் இல்லை என லாலு கூறியதற்கு தெலங்கானா பொதுக்கூட்டத்தில் இன்று பதில் அளித்த பிரதமர் மோடி, “என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டின் 140 கோடி மக்களும் என் குடும்பம்தான். இன்று நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் மோடியின் குடும்பத்தில்தான் உள்ளனர். 
நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பத்தில்தான் உள்ளனர். யாரும் இல்லாதவர்களும் மோடிக்கு சொந்தம், மோடி அவர்களுக்கும் சொந்தம். அவர்கள், நானும் மோடி குடும்பம் என சொல்கிறார்கள். ஊழலிலும் குடும்ப அரசியலிலும் சமரச அரசியலிலும் இந்தியக் கூட்டணியின் தலைவர்கள் மூழ்கியுள்ளனர். அவர்களின் குடும்ப அரசியலை நான் கேள்வி கேட்டால், மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள்” என்றார்.
இதை தொடர்ந்து, ‘மோடி கா பரிவார்’ என்ற பெயரில் பாஜக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ. பி. நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், தங்களின் பெயரோடு ‘மோடி கா பரிவார்’ என்ற வாக்கியத்தையும் சேர்த்துள்ளனர். ‘மோடி கா பரிவார்’ என்றால் மோடியின் குடும்பம் என அர்த்தம்.
 

Happy to belong to #Modi_Ka_Parivar #மோதியின்குடும்பம் மோதியின் குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சொல்லுவதில் பெருமை கொள்கிறேன்.#ModiJiKaParivaar
— Nirmala Sitharaman (Modi Ka Parivar) (@nsitharaman) March 4, 2024

கடந்த 2014 தேர்தலில், ‘சாய் பே சர்ச்சா’ என்ற பெயரிலும் கடந்த 2019ஆம் ஆண்டு, ‘மெயின் பி சவுகிதார்’ என்ற பெயரிலும் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் காண

Source link