PM Modi visiting Tamil Nadu today – plans and schedules on february 27 & 28 check the details


PM Modi TN Visit: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். இதில் பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இன்றைய பயண விவரம்:

இன்று பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்
பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி
2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்
6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்
அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமரின் நாளைய பயண திட்டம்:

நாளை காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி
9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார். இதில் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளமும் அடங்கும்.
10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு  திருநெல்வேலி செல்கிறார்
ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்கிறார்.
11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்
12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமரின் வருகையை தொடர்ந்து மதுரை விமான நிலையம், அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவை மத்திய பாதுகாப்பு படைப்பிரிவினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தீவிர பரிசோதனைக்கு பிறகே பொதுமக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தங்க உள்ள தனியார் ஓட்டலில் 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  பிரதமர் பயணிக்க உள்ள சாலைகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் கொண்டு அந்த பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. 

மேலும் காண

Source link