IND vs AFG: இன்னும் 35 ரன்களை எடுத்தால் முதல் இந்தியர்! இந்தூரில் இன்று வரலாறு படைப்பாரா கோலி?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஜனவரி 14) இந்தூரில் நடக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய டி20 அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குகிறார். கோலி கடைசியாக 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.

டி20யில் 12 ஆயிரம் ரன்கள்:

நீண்ட நாட்களுக்குப் பிறகு டி20க்கு திரும்பியதால், விராட் கோலி இன்றைய போட்டியில் எப்படி விளையாடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைக்க இருக்கிறார். விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை எட்ட இருக்கிறார். இந்த சாதனையை எட்ட அவருக்கு 35 ரன்கள் மட்டும் தேவையாக உள்ளது.

இந்தூரில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு  இடையிலான போட்டியில் விராட் கோலி, 35 ரன்கள் எடுத்தால், ஒட்டுமொத்தமாக டி20 போட்டி வரலாற்றில் 12,000 ரன்கள் எடுத்த நான்காவது கிரிக்கெட் வீரரும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைப்பார்.

விராட் கோலி இதுவரை டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச + உள்நாட்டு டி20 + ஃப்ரான்சைஸ் லீக்) 11,965 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு முன்னால் உள்ள மூன்று பேட்ஸ்மேன்களும் 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் 14,562 ரன்கள் குவித்த கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடம் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பெயரில் உள்ளது. இவர் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 12,993 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில், கீரன் பொல்லார்டு 12,430 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

16 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலி:

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து முறியடிக்க முடியாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை மொத்தம் 374 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி,  41.40 சராசரியில் 11,965 ரன்கள் எடுத்தார். இந்த காலகட்டத்தில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 133.35 ஆக இருந்தது. மேலும், ஒட்டுமொத்தமாக 8 சதங்கள் மற்றும் 91 அரை சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இவர் மொத்தமாக எடுத்துள்ள 11,965 ரன்களில் சர்வதேச அளவில் 4,008 ரன்களும், ஐபிஎல்லில் 7,263 ரன்களும் எடுத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள்:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 37 அரைசதங்களுடன்  முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து, பாபர் அசாம் 98 இன்னிங்ஸில் 30 அரைசதங்கள், ரோஹித் ஷர்மா 140 இன்னிங்ஸ்களில் 29 அரைசதங்கள், முகமது ரிஸ்வான் 73 இன்னிங்ஸில் 25 அரைசதங்கள், டேவிட் வார்னர் 99 இன்னிங்ஸ்களில் 24 அரைசதங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதிக ஆட்டநாயகன் விருது:

விராட் கோலி வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் (MOTM) விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் ஆட்டநாயகன் விருதுகளை 15 முறை வென்றுள்ளார்.

கூடுதலாக, விராட் கோலி டி20 உலகக் கோப்பைகளில் (2014 மற்றும் 2016 இல்) இரண்டு முறை உட்பட, 7 முறை தொடர் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

Source link