Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details


ராம பக்தர்களை குண்டர்கள் என கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்கவேண்டும் – வானதி

கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”வேல் வழிபாடு என்பது நம்முடைய கலாச்சாரத்தில் பல்ல நூறு ஆண்டுகளாக கலந்து உள்ளது.  வேலினை வழிபடுவதால் துன்பங்களில் இருந்து விடுபடுவதுடன் வாழ்க்கையில் வளங்களுக்காகவும், அமைதிக்காகவும் இந்த வேல் வழிபாடு ஆன்மீக பெரியோர்களால் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க.,

அதிர்ச்சி! குத்துசண்டை ஜாம்பவான் மேரி கோம் ஓய்வு – சோகத்தில் ரசிகர்கள்

இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டை பற்றி குறிப்பிடும்போதும் சில வீரர்கள் அதற்கு அடையாளமாக திகழ்வார்கள். இந்தியாவில் குத்துச்சண்டை என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது மேரி கோம் ஆவார். ஆண்களை காட்டிலும் குத்துச்சண்டை போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாடுகள் மூலம் உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்று புகழ்பெற்றவர். இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேரி கோம் இந்த அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க.,

இன்று தேசிய சுற்றுலா தினம்; முக்கியத்துவமும் சில டிப்ஸ்களும்!

இந்தியாவின் பன்முகத்தன்மை, காலாச்சார, பாரம்பரியம்,  சுற்றுலா நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும்வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பாரம்பரியமிக்க இடங்கள் உலக அளவில் பிரபலமானவை. சுற்றுலா துறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1948-ம் ஆண்டு முதல் ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா துறையின் பங்களிப்பு, அது சார்ந்து இயக்கும் மனிதர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாளாகவும் இந்த நாள் இருக்கிறது. மேலும் படிக்க.,

நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இதுவரை அறிவிக்காவிட்டாலும், கடந்த ஓராண்டாகவே அரசியல் கட்சிகள் அந்த பணியைத் தொடங்கிவிட்டன.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தமிழ்நாட்டில் தி.மு.க. தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தேர்தல் பணிகளை கண்காணிக்க, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த என 3 குழுக்களை தி.மு.க. அமைத்தது. மேலும் படிக்க.,

இன்று தைப்பூசம்! களைகட்டும் முருகன் கோயில்கள்! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச நன்னாளில் மற்ற நாட்களை காட்டிலும் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அலைமோதும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் படிக்க.,

Source link