Tamilnadu Latest Headlines News Update 9th January 2024 Tamilnadu Flash News Vijayakanth Death | TN Headlines: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000


Pongal Parisu Thogai: பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000.. முதலமைச்சர் அறிவிப்பு..

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

TN Rain Alert: இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. எத்தனை நாட்களுக்கு கனமழை நீடிக்கும்?

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை  ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க

CM Stalin: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு- விவரம்

மதச்சார்பு சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுவாக கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு சார்பில், மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இனி காலம் குறிப்பிடாமல், நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் படிக்க

10th 12th Exam Dates: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்படுகிறதா?- அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கியத் தகவல்

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் எதுவுமில்லை என்றும் பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு தேதிகளை அறிவிக்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

Bilkis Bano case: பாஜகவின் இரட்டை வேடம்: குஜராத் அரசை கண்டித்த உச்சநீதிமன்றம் – நிம்மதி பெருமூச்சு விட்ட முதல்வர் ஸ்டாலின்

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. மேலும் படிக்க
 

Source link