Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியுமே விழா கோலம் பூண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள், இந்திய திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், துறவிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்ற பட்டியலை கீழே காணலாம்.

சச்சின் டெண்டுல்கர்

எம். எஸ்.தோனி

விராட் கோலி

கவுதம் கம்பீர்

மிதாலி ராஜ்

ரவிச்சந்திரன் அஸ்வின்

கபில்தேவ்

ராகுல் டிராவிட்

ரவீந்திர ஜடேஜா

ரோகித் சர்மா

சவ்ரவ் கங்குலி

சுனில் கவாஸ்கர்

அனில் கும்ப்ளே

வீரேந்தர் சேவாக்

ராமர்  கோயில் திறப்பு விழா:

ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக அழைக்கப்பட்ட கிரிக்கெட்டர்களில் மிதாலி ராஜ் மட்டுமே மகளிர் ஆவார். அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் கிரிக்கெட் ஆடி சாதனை புரிந்தவரும் மற்றும் முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய முன்னாள் வீரர்களும், தற்போது ஆடும் வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் கவுதம் கம்பீர் பா.ஜ.க. எம்.பி. ஆவார். ஜடேஜாவின் மனைவி பா.ஜ.க. எம்.பி. ஆவார்.

கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று தந்தவர்கள். கோலி, ரோகித்சர்மா, ஜடேஜா, அஸ்வின் மட்டுமே தற்போது இந்திய அணிக்காக ஆடுபவர்கள். மற்ற வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஆவார்கள்.

நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Source link