tapsee pannu opens up about her marriage for the first time


திருமணம் பற்றி தெரிவிக்க மனதளவில் தான் தயாராக இல்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
டாப்ஸி பன்னு
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி  நடிகையாக இருந்து வருவர் நடிகை டாப்ஸி. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் ஐரீனாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த டாப்ஸி காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த டாப்ஸி ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். பிங், கேம் ஓவர்,ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் உள்ளிட்டப் படங்களின் மூலம் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஷாருக் கான் நடித்து இந்தியில் வெளியான டங்கி படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.
காதலனுடன் திருமணம்
தனது முதல் படத்தில்  நடித்தபோது நடிகை டென்மார்க்கைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மாத்தியாஸ் போவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். தனது காதல் வாழ்க்கைப் பற்றி டாப்ஸி பெரியளவில் வெளியே பேசுவதை தவிர்த்தே வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி டாப்ஸி தனது காதலை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து திருமண கோலத்தில் டாப்ஸியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தன. தனது திருமணம் பற்றி டாப்ஸி எந்த தகவலும் வெளியே தெரிவிக்கவில்லை. தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணத்தை முடித்துள்ளார். தற்போது தனது திருமணம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை டாப்ஸி.

Taapsee Pannu’s Simple yet “FAIRYTALE” wedding video with bae Mathias Boe 🥰🫶❤️#TaapseePannu #MathiasBoe #Taapsee #bollywoodactress pic.twitter.com/EKz96Y6TMQ
— cine_sdn (@cinesdn) April 3, 2024

திருமணம் பற்றி பேச மனதளவில் தயாராக இல்லை
 ”நான் என்னுடைய திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிடவில்லை. ஆனால் இந்த தகவலை வெளியே தெரிவித்தால் நிறைய விதமான கருத்துக்கள் வரும். உண்மையை சொல்லப் போனால் திருமணத்தைப் பற்றி தெரிவிக்க மனதளவில் நான் தயாராக இல்லை. என் தங்கை தான் என் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார்.  நான் அவரிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. அவர் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். எங்கள் திருமணத்தில் குறைவான நபர்கள் மட்டும் கலந்துகொண்டதால் எந்தவித அழுத்தமும் ஏற்படவில்லை “ என்று டாப்ஸி கூறியுள்ளார்.
 
 

மேலும் காண

Source link