மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனும் பிரபலமான நடிகருமான துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் நடிப்பில் வெளியான ஓ காதல்  கண்மணி,  சீதா ராமம் உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக ஆக்ஷன் ஜானரில் அவர் நடிப்பில் வெளியான ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் அப்படத்தில் தொடர முடியாமல் போனது. 
 

 
தனுஷின் ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தெலுங்கு திரையுலக இயக்குநர் வெங்கி அட்லூரி. தற்போது அவர் நடிகர் துல்கர் சல்மானை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. 
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

 
வங்கி ஊழியராக துல்கர் சல்மான் இப்படத்தில் நடித்துள்ளார். மிகவும் விறுவிறுப்பாக அவரைச் சுற்றி நகரும் வகையில் இந்த கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் துல்கர் சல்மான். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருக்கும் அவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. அது அவருக்கு எப்படி வந்தது? அதற்கு பின்னணியில் இருக்கும் பிளாஷ்பேக் ஸ்டோரி என்ன என்பது தான் லக்கி பாஸ்கர் கதைக்களமாக இருக்கும் என்பது டீசர் மூலம் அறியப்படுகிறது. 
இப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் இப்படம் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed