Mahesh Babu Clarifies The Usage Of Ayurvedic Beedi In The Film Guntur Kaaram

Guntur Kaaram : தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

ஆக்ஷன் ஜானரில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் காம்போ என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் இப்படம் வெளியான முதல் நாள் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் திரண்டதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமே ரூ.94 கோடி என நெருங்கிய டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் மகேஷ் பாபு நடித்த படங்களில் அதிக ஓப்பனிங் பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் அவரின் ரசிகர்கள் குண்டூர் காரம் படத்தை கொண்டாடி வருகிறார்கள். 
‘குண்டூர் காரம்’ படத்தில் நடிகர் மகேஷ் பாபு, ரவுடித்தனம் கொண்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். எந்நேரம் புகையும் பீடியுமாக லுங்கியில் அலட்டலான ஒரு பாடி லாங்குவேஜ் கொண்டு படம் முழுக்க ட்ராவல் செய்துள்ளார் மகேஷ் பாபு. இதனால் அவர் படம் முழுக்க பீடி குடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் பீடி பயன்படுத்தியது குறித்து விளக்கம் ஒன்றை கூறி இருந்தார். 
“குண்டூர் காரம் படத்தில் நான் பயன்படுத்தியது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. படப்பிடிப்பு துவங்கியபோது ஒரிஜினல் பீடியை முதல்முறை பயன்படுத்த கொடுத்தார்கள். பயன்படுத்திய கொஞ்ச நேரத்திலேயே தலைவலி வந்துவிட்டது. 

இது இயக்குநருக்கு தெரியவந்தது. அதற்கு மேல் அந்த பீடியை பயன்படுத்த முடியாது என நான் கூறியதால், இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். இதை பயன்படுத்துவதால் எந்த பிரச்சினையும் வராது என உறுதிப்படுத்திய பிறகுதான் பயன்படுத்தினேன். அது நன்றாக இருக்கவே படம் முழுக்க அதைப் பயன்படுத்தினேன். புகைபிடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. மேலும் அதை நான் மற்றவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கவும் மாட்டேன்” என தெளிவான விளக்கம் கொடுத்து இருந்தார் நடிகர் மகேஷ் பாபு.  

Source link