The Madras Special Court has acquitted former DMK MLA Ranganathan in the murder case. | Special Court: ’கொலை வழக்கிலிருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை’


கொலை வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை செய்து  சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கவில்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜ் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10 ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நிலத் தகராறு தொடர்பான பிரச்சினையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் காவல் நிலையத்தினர், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனின் தூண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், ஆனால் குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதாலும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக்கோரி புவனேஸ்வரனின் தந்தை சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,’ குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ., விசாரணை நடத்த 2014 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணையை நடத்திய சி.பி.ஐ. காவல்துறையினர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2020 முதல் நடந்து வந்த இந்த வழக்கில், சாட்சிகள் விசாரணை, குறுக்கு/விசாரணை, இரு தரப்பு வாதங்கள் ஆகியவை முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி கே.ரவி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலச்சந்திரன் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலச்சந்திரன் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கே.ரவி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்க வில்லை என்பதால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 

மேலும் காண

Source link