மகளிர் பிரீமியர் லீக்கில் யு.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் சீசனைப் போல் இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும்.

இந்நிலையில் இந்த சீசனின் இரண்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ,யு.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய யு.பி. வாரியர்ஸ் அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. யு.பி அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான அலெக்ஸா ஹீலீ தனது விக்கெட்டினை அணியின் ஸ்கோர் 10ஆக இருந்தபோது இழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து இலக்கை நோக்கி சீராக முன்னேறி வந்தது. இதனால் இந்த போட்டியில் யு.பி அணி வெற்றி பெறும் என நினைத்த போது, பெங்களூரு அணியின் ஆஷா ஷோபனா விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி போட்டியை பெங்களூரு வசம் கொண்டு வந்தார். 4 ஓவர்கள் வீசிய ஆஷா ஷோபனா 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இறுதியில் யு.பி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை 7 இழந்து 155 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் மொத்தம் 7 வீராங்கனைகள் பந்து வீசினர்.

முதல் இன்னிங்ஸ்

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்ததைப் போல் சிறப்பாக அமையவில்லை. அணியின் ஸ்கோர் 13 ரன்களாக இருந்தபோது ஷோஃபி டிவைன், 36 ரன்களில் இருந்த போது ஸ்மிருதி மந்தனா மற்றும் 54 ரன்களில் எல்லீஸ் பெரி ஆகியோர் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கைகோர்த்த மேக்னா மற்றும் ரிச்சி கோஷ் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்த மீட்டனர். மேக்னா அரைசதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.

ஆனால் மேக்னாவுக்குப் பின்னர் வந்த ஜார்ஜியா டக் அவுட் ஆகி வெளியேறியதால் பெங்களூரு அணி மீண்டும் சரிவினைச் சந்தித்தது. பெங்களூரு அணி சார்பில் மேக்னா 53 ரன்களும் ரிச்சா கோஷ் 62 ரன்களும் சேர்த்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது.

யு.பி. வாரியர்ஸ் அணியின் சார்பில் ராஜேஷ்வரி ஜெய்க்வாட் 2 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா, ஷோபி எக்கல்ஸ்டன், தாலியா மெக்ராத் மற்றும் கிரேஸ் ஹாரீஸ் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பெங்களூரு அணி சார்பில் ஷோபி டிவைன் ஒரு ரன்னும், ஸ்மிருதி மந்தனா 13 ரன்களும், மேக்னா 53 ரன்களும், எல்லீஸ் பெர்ரி 8 ரன்களும், ரிச்சா கோஷ் 62 ரன்களும், ஷோபி மோலிநக்ஸ் 9 ரன்களும் மற்றும் ஸ்ரேயங்கா பட்டீல் 8 ரன்களும் சேர்த்தனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
sloty za pieniądze My blog: Kasyno Online Bonus Maj 2026
paid Best odds online Sports betting tips
casas de apuestas online en chile deportivas directo
nexus darknet darknet markets onion address
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album | ACTPnews.com

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை | ACTPnews.com

Если вы хотите надежно оградить свой участок, обратите внимание на [url=https://www.zabor-dlya-dachi-iz-proflista.ru/]металлический забор из профлиста на дачу цена[/url] — это оптимальное…