crime Youth who kidnapped and molested 16-year-old girl through Instagram arrested in Poso act


திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதி ஒரு கிராமத்தை  சேர்ந்த 16 வயது பெண். இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது பெண்ணையும் அவருடைய தந்தையும், பெண்ணின் தாய் வீட்டில் விட்டுவிட்டு பெண்ணின் தாய் அவருடைய தாய் வீட்டிற்கு மகன் மற்றொரு மகளையும் அழைத்து சென்று விட்டார்.
இன்ஸ்டாகிராமில் காதல் நாடகமாடி 16 வயது பெண் கடத்தல் 
இந்த நிலையில் 16 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து அனுக்கவூர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் புகார் செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் குச்சிபாளையம் சேர்ந்த கதிரவன் வயது (19) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் கதிரவன் 16 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பழகி வந்துள்ளார்.  இந்தநிலையில் இருவருக்கும் இடையே நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தால் 16 வயது பெண்ணை கதிரவன்  வீட்டுக்கு  வெளியே வரச்சொல்லி  பெண்ணை கடத்தி சென்றுள்ளார். 
மேலும் படிக்க; Tamizhaga Vetri kazhagam: தொடங்கிய சர்ச்சை: தமிழ்நாடு இல்லையா… தமிழக வெற்றி கழகம் ஏன்?

இளைஞர் போக்சோவில் கைது  
அதனைத் தொடர்ந்து கடத்தி சென்ற 16 வயது பெண்ணை கதிரவன் பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டது தெரியவந்துள்ளதக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கதிரவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில்  அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம் 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது. 
மேலும் படிக்க ;உலகை ஆட்டிப்படைக்கப்போகும் புற்றுநோய்! காத்திருக்கும் அதிர்ச்சி.. பகீர் கிளப்பும் WHO அறிக்கை!

மேலும் காண

Source link