thalaivar 171 movie this old rajinikanth film title said to be the lokesh movie title


‘தலைவர் 171’ (Thalaivar 171) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.
லோகேஷ் இயக்கம்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் தன் அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைப்பது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து இப்பட வேலைகளுக்காக இணையத்தில் இருந்து விலகிய லோகேஷ் முழுமூச்சாக பட ஸ்க்ரிப்ட் பணிகளில் பிசியாக, கடந்த வாரம் தலைவர் 171 படத்தின் போஸ்டருடன் டைட்டில் அப்டேட் பற்றிய தகவல் வெளியானது.
பரபரப்பு கிளப்பிய போஸ்டர்
நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் பட ஹீரோ பாணியில் கையில் விலங்குடன் மாஸ் லுக்கில் அசத்தும்படியான போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
கைக்கடிகாரத்தில் செய்யப்பட்ட விலங்கினை ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்துடன் ரஜினி இருக்கும் இந்தப் போஸ்டரை வைத்து இப்படம் டைம் ட்ராவல் கதையாக இருக்கலாம் என்றும், ரஜினிகாந்த் கைதியாகவும், க்ரே ஷேட் கதாபாத்திரத்திலும் இருக்கலாம் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவின.
பழைய ரஜினி பட டைட்டில்
இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் ‘கழுகு’ என ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
1981ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏற்கனவே கழுகு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் 2012ஆம் ஆண்டு கழுகு எனும் பெயரில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்க மற்றொரு தமிழ் படம் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த காக்கா-  கழுகு பஞ்சாயத்து, ரஜினிகாந்தின் விளக்கம் ஆகியவற்றால் லைம்லைட்டில் இருந்த கழுகு எனும் பெயரையே படக்குழு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் இந்த காக்கா – கழுகு பிரச்னைக்கு ஒரு எண்டே இல்லையா என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!
Indraja Shankar: மாமியாருக்கு தவறுதலாக முத்தம்.. சர்ச்சையைக் கிளப்பிய ரோபோ சங்கர் மகள் திருமண வீடியோ!
 

மேலும் காண

Source link