A R Rahman : இசையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் இசைப்புயல்: அப்படி என்ன விசேஷம்ன்னு பாருங்க

இசையில் நவீன தொழில் நுட்பங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ரஹ்மான் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் ஏதாவது ஒரு புதிய இசைக்கருவியை வாசிக்கப் பழகிகொண்டே அதை பயன்படுத்தி படங்களுக்கு இசையமைக்கவும் செய்வார்.  தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தன்னை எப்போதும் தகவமைத்துக் கொண்டே வருபவர் ரஹ்மான்.

மறைந்த பாடகர்களின் குரல்களை உயிர்பித்த ரஹ்மான்

வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் லால் சலாம் படத்திலும் அப்படியான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். செயற்கை தொழில் நுட்பத்தின் மூல மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியவர்களின் குரல்களை மறுவுருவாக்கம் செய்து பாடலை உருவாக்கியிருக்கிறார்.  இது தொடர்பாக அவர் மேல் பலவித விமர்சனங்கள் எழுந்தன. இரு பாடகர்களின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதியை தான் பெற்றதாகவும் இவர்களின் குரலை பயன்படுத்தியதற்கான உரிமத் தொகையையும் தான் கொடுத்திருப்பதாகவும் ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் டெக்னாலஜி என்பது ஆபத்தோ உபத்திரவமோ கிடையாது என்று அவர் இந்த பதிவில் கூறியிருந்தார்.

மெய்நிகர் இசைக்குழுவை உருவாக்கிய ரஹ்மான்

லால் சலாம் படத்தைப் போல் மற்றொரு புதுமையான முன்னெடுப்பை ரஹ்மான் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் SWFI  ஓருங்கிணைத்து துபாயில் நடைபெற்ற Abundance for the future  நிகழ்வில் ரஹ்மான் மெட்டா ஹ்யூமன்ஸ் என்கிற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார்.   வெவ்வேறு கலாச்சாரப் பின்புலத்தைச் சேர்ந்த ஆறு இசைக்கலைஞர்களை உள்ளடக்கியதே இந்தத் திட்டம். மனிதநேயத்தைப் பரப்பும் வகையில் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு இசைக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆறு இசைக்கலைஞர்கள் செய்ல்பாடுவார்கள். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆறு நபர்களும் நிஜ மனிதர்கள் கிடையாது . அவர்கள் மெய்நிகர் உருவங்கள் மட்டுமே. அதனால்தான் இதற்கு மெட்டா ஹ்யூமன்ஸ் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த ஆறு இசைக் கலைஞர்களுக்கான மெய்நிகர் உருவங்கள் மற்றும் அவர்களின் அசைவுகள் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப் படும். இவர்களுக்கு பின் ரஹ்மான் உட்பட பல்வேறு இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட இருக்கிறார்கள். HBAR Foundation இத்திடத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. மேலும் இன்னும் பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைய இருக்கிறார்கள்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்கிற அச்சம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. குறிப்பாக சினிமா மற்றும் பிற கலைத் துறையில் இதன் பயன்பாடு பலருக்கான வேலை வாய்ப்புகளை பறித்துவிடும் என்கிற அச்சம் நிலவுகிறது. ஆனால் தொழில்நுட்பம் மிகச் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் அது கலைக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமையும் என்று ரஹ்மான் பல வருடங்களாக கூறி வருகிறார். தற்போது அவரது இந்த முயற்சி அவரது கூற்றுக்கு இன்னும் உறுதி சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Source link