அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களே லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்திய மாணவர் மர்ம மரணம்:
தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத். 25 வயதான முகமது அப்துல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மாயமானார். இதனால், அங்குள்ள அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து, அந்த நாட்டு காவல்துறையினருக்கும், அங்குள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை மாயமான முகமது அப்துல் அர்ஃபத்தை சடலமாக மீட்டுள்ளனர். அவரது சடலத்தை ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்டில் மீட்டுள்ளனர்.
3 மாதங்களில் 11வது இந்தியர்:
மாயமான இந்திய மாணவர் 3 வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்குள்ள அவரது நண்பர்களுக்கும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படித்து வரும் சூழலில், இந்தாண்டு மட்டும் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். முகமது அப்துல்லின் மரணம் நடப்பாண்டில் மட்டும் நிகழும் 11வது இந்தியரின் மரணம் ஆகும். அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும், அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.
அச்சத்தில் இந்தியர்கள்:
மேலும், இந்தியாவில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர் பெரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். சில மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கே திரும்பி வருகின்றனர். கடந்த 2022 -2023 காலகட்டத்தில் மட்டும் 2.6 லட்சம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். வழக்கமாக, படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது 35 சதவீதம் அதிகம் ஆகும்.
இதுதொடர்பாக, முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தியர்களின் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகமும் அந்த நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும் படிக்க: ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..
மேலும் படிக்க: Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து – 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு..!
மேலும் காண