ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்


பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரு சபைகளிலும் உரையாற்றுகிறார். புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறையாக செங்கோல் ஏந்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, ​​உரையாற்றிய குடியரசு தலைவர், “சுதந்திரத்தின் அழியாத காலகட்டத்தின் துவக்கம் இதுவாகும். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். 
சந்திரயான் – 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவண்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது” என உரையாற்றி வருகிறார். 
இந்தநிலையில், புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசிய டாப் 10 பாயிண்ட்ஸ்களை இங்கே பார்க்கலாம். 

 கடந்த 10 வருட கொண்டு வரப்பட்ட திட்டங்களில் அடிப்படையில் இன்று நாம் கண்டுவரும் சாதனைகள். ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற கோஷத்தை சிறுவயதில் இருந்தே கேட்டிருப்போம். இன்று, நம் வாழ்வில் முதன்முறையாக, பெரிய அளவில் வறுமை ஒழிக்கப்படுவதைக் காண்கிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் இரண்டு பெரிய போர்கள் நடந்தது. கொரோனா போன்ற தொற்றுநோயை உலகளவில் எதிர்கொண்டோம். இத்தகைய உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், நமது அரசாங்கம் நாட்டில் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தது. எந்தவொரு இந்தியர்களின் சுமையை ஒருபோதும் அதிகரிக்க அனுமதிக்கவில்லை.
வளர்ந்த இந்திய என்னும் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய நான்கு வலுவான தூண்களின் மீது நிற்கும் என்று எனது அரசாங்கம் நம்புகிறது.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தன்னிறைவு இந்தியா’ ஆகியவை நமது பலமாக மாறியுள்ளன. உற்பத்தியில் 1 லட்சம் கோடி ரூபாயை இந்தியா கடந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவிற்கு சாதனைகள் மற்றும் பல வெற்றிகள் குவித்தது. இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியது.
நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இந்தியா நடத்திய வெற்றிகரமான G20 உச்சி மாநாடு இந்தியாவின் பங்கை பலப்படுத்தியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது. இந்தியாவுக்கும் அடல் சுரங்கப்பாதை கிடைத்தது.
புதிய நாடாளுமன்றத்தில் இது எனது முதல் உரை. இந்த பிரமாண்டமான கட்டிடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. இதன்மூலம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.
 21ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவின் புதிய மரபுகளைக் கட்டமைக்கும் தீர்மானமும் உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் கொள்கைகள் பற்றிய அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.இது நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75வது ஆண்டாகும். அதே காலகட்டத்தில், சுதந்திரத்தின் 75 ஆண்டு கொண்டாட்டம், அமிர்த மஹோத்ஸவும் நடந்தது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக சுதந்திரப் போராட்ட வீரர்களை நாடு நினைவு கூர்ந்தது.

மேலும் காண

Source link