காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான, திருமால் ஆமை வடிவில் வந்து ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று இன்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்கு உள்ளாக மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிறப்பு யாகங்கள்
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 33 யாகம் சாலை அமைக்கப்பட்டு, 163 சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள்
கும்பாபிஷேக விழாவில் சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சுவாமியை வணங்கி வழிபட்டு சென்றனர். சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னுருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் ( kanchipuram kachabeswarar temple )
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயில் ” கச்சபேசம் ” எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில் தனி படலமாக அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தல புராணம்
அமிர்தம் எடுப்பதற்காக, பாற்கடலை கடைந்த பொழுது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில், மூழ்கிக் கொண்டிருந்தது. இதனால் அமிர்தம் கிடைக்காமல் பணி தடைபடும் அபாயம் இருந்தது. இதனால் மகாவிஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு உண்டாகியதாக கூறப்படுகிறது. உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால் சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை, வென்டக மலையனிடையே மறைத்து வைத்துள்ளார் அதன் பிறகு, தனது தவறை உணர்ந்து. இதனை அடுத்து திருமால் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்டுள்ளார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் காண