India Vs England 2nd Test Shubman Gill Smashes First Test Century In After 11 Months

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253  ரன்கள் சேர்த்தது. 
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியது. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத்தொடர்ந்து மறுபுறம் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 52 பந்துகள் களத்தில் நின்று 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராஜத் படிதர் 9 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் சுப்மன் கில். அப்போது சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
11 மாதங்களுக்கு பிற சதம் விளாசிய கில்:

WELL PLAYED, SHUBHAM GILL 🫡104 runs from 147 balls including 11 fours & 2 sixes when India was under pressure in the 2nd innings – it’s great news for Indian team that Gill is back in form. pic.twitter.com/OS5ni71xLC
— Johns. (@CricCrazyJohns) February 4, 2024

இந்நிலையில் தான் அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணி வீரர் சுப்மன் கில் 132 பந்துகளில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்திருக்கும் 3 வது சதம் ஆகும். அதன்படி, மொத்தம் 147 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்தார்.  டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருவதாக பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது எழுந்த நிலையில் கடந்த 11 மதங்களுக்கு பிறகு இன்றைய சதத்தின் மூலம் அதை உடைத்திருக்கிறார் சுப்மன் கில்.
முன்னதாக, சர்வதேச அளவில் தன்னுடைய 24 வயதிற்குள் 10 சதங்களை பூர்த்தி செய்திருக்கிறார். அதன்படி, ஒருநாள் போட்டிகளில் 6 சதம், டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் மற்றும் டி20 போட்டிகளில் 1 சதம் விளாசியிருக்கிறார்.
மேலும் படிக்க: IND vs ENG 2nd Innings: மூன்றாவது நாள் ஆட்டம்…அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி!
மேலும் படிக்க: India vs England 2nd Test: சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்…மோசமான ரெக்கார்டை செய்த இந்திய அணி!

Source link