TN Ministers Case: அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின் உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்த விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழ்நாடு அரசியல் களம் கடந்த  8 மாதமாகவே வழக்கமான அரசியல் பரபரப்பை விட கூடுதல் பரபரப்பில் உள்ளது. குறிப்பாக ஆட்சியில் உள்ள திமுகவின் கேபினட் அமைச்சர்களை குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்குப் பின்னால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் உள்ளீடு இருப்பதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு பெல்ட்டில் திமுகவின் பலம் என்பது அதிமுகவை விட சற்று குறைவுதான். அதிமுகவின்  முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உட்கட்சி அரசியலால் திமுகவில் இணைந்து, தற்போது அமைச்சராகவுள்ளார். செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அவரது சொந்த மாவட்டமான கருரைக் கடந்து, கொங்கு மண்டலத்திலும் எதிரொலித்ததால், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை திமுகவில் ஒரு பொதுக் கூட்டத்தில் இணைத்தார். இது கோவையில் நன்கு காலூன்ற நினைக்கும் பாஜகவுக்கும் கொங்கு மண்டலத்தில் பலமான வாக்கு வங்கியை வைத்துள்ள அதிமுகவுக்கு சவால் அளிப்பவராக செந்தில் பாலாஜி பார்க்கப்பட்டார்.

இதனால் செந்தில் பாலாஜியை பாஜக தன்வசம் ஈர்த்துக் கொள்ள திட்டம் தீட்டியதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி ஒத்துவரவில்லை எனவும் அதனால்தான் செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கை அமலாக்கத்துறை தூசி தட்டி விசாரணையைத் தொடங்கியது எனவும் இதற்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்றுவரை அவரது நீதிமன்ற விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.

இவரை அடுத்து உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது இருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் மாவட்ட நீதிமன்றம் பொன்முடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி என இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேல் முறையீடு செய்துள்ளதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.

இந்நிலையில் , தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மீது இருந்த சொத்து குவிப்பு வழக்கில் மாவட்ட நீதிமன்றங்கள் இவர்களை விடுவித்தது.

இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரித்தார். இந்த வழக்குகளை நேற்று முதல் தினமும் பிற்பகல் 3 மணிக்கு விசாரித்த நீதிபதி அன்றைய தினமே தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் சீனியர் வழக்கறிஞரான பி.எஸ். ராமன் தாமாக முன்வந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு தடை விதிக்ககோரி வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு  உத்தரவு பிறப்பித்து கடிதம் எழுதினார். அந்த உத்தரவை படித்துப் பார்க்கவேண்டும் எனவும், எனவே விசாரணையை  தள்ளி வைக்கவேண்டும் எனவும் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதால், விசாரணையை இன்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனால் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link