7 am headlines today 2024 4th February headlines news tamilnadu India ind vs eng test

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் அண்ணாவின் 55வது நினைவு தினம் அனுசரிப்பு – பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை 
ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணி – தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது
திமுகவின் கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு வரலாம் – அமைச்சர் ஜெயக்குமார் கணிப்பு 
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 25 ஆம் தேதி நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அறிவிப்பு 
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு – மதிமுகவுடன் திமுக தேர்தல் குழு இன்று பேச்சுவார்த்தை 
கன்னியாகுமரியில் தமிழ்நாடு – கேரளா அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்
புதுச்சேரி மாநில அரசை கண்டித்து பிப்ரவரி 10 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு 
மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் 
ஆம்னி பஸ்களை சென்னை மாநகர எல்லைக்குள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும் – உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல் 
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து 8 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.,க்கள் சார்பில் போராட்டம் அறிவிப்பு 
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும்  வாழ்த்து 
கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 

இந்தியா:

அதானியின் மூலதனம் பிரதமர் மோடி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றச்சாட்டு 
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு 
ஜார்க்கண்டில் சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு நாளை பதவியேற்பு – நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம் என உத்தரவு 
மேற்கு வங்கத்துக்கான நிதியை விடுவிக்க கோரி அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் 
தொடரும் சர்ச்சை காரணமாக பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியில் இருந்து பன்வாரிலால் புரோகித் ராஜினாமா
காவல் நிலையத்தில் மோதல் – சிவசேனா நிர்வாகி மீது துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்.எல்.ஏ., 

உலகம்:

கிழக்கு ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க் மீது உக்ரைன் தாக்குதல் – 20 பேர் உயிரிழந்து இருக்கலாம் என ரஷ்யா தகவல் 
சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு, 1000 வீடுகள் சேதம் 
இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் – இம்ரான்கான், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை 
தேர்தலில் இந்தியாவின் தலையீடு அதிகம் உள்ளதாக கனடா அரசு குற்றச்சாட்டு 
தென்கொரியாவுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்குமாறு வடகொரியா படை வீரர்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு 

ளையாட்டு:

ப்ரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி 
ப்ரோ கபடி லீக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது உத்தரப்பிரதேச யோத்தாஸ் அணி 
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி 
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து – பும்ரா 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல் 

Published at : 04 Feb 2024 06:45 AM (IST)

மேலும் காண

Source link