Lok Sabha Election 2024: களைகட்டும் அரசியல் களம்! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் திமுக – ஸ்டாலின் மிஷன் தயார்!

Loksabha Election 2024:  வரும் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம்  மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது.

களைகட்டும் அரசியல் களம்:

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தவிர, இதர கட்சிகளுக்கு, மக்களவைக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 19 தொகுதிகள் போக, மீதமுள்ள 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது.  இதோடு, தேர்தல் அறிக்கையும் திமுக வெளியிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் திமுக:

இந்த நிலையில், வரும் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம்  மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதன்படி, 22ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், 23ஆம் தேதி தஞ்சை, நாகை, 25ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, 26ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், 27ஆம் தேதி தென்காசி, விருதுநகர், 29ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, 30ஆம் தேதி சேலம், கிருஷ்ணகிரி, 31ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர், 2ஆம் தேதி வேலூர், அரக்கோணம், 3ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, 5ஆம் தேதி கடலூர், விழுப்புரம், 6ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து, 7ஆம் தேதி புதுச்சேரி, 9ஆம் தேதி மதுரை, சிவகங்கை, 10ஆம் தேதி தேனி திண்டுக்கல்,  12ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, 13ஆம் தேதி கோவை, பொள்ளாச்சி, 15ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னை, 18ஆம் தேதி காஞ்சிபுரம், திருபெரும்புதூர், 17ஆம் தேதி தென்சென்னை, வடசென்னையில் இறுதியாக பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Source link