Captain Miller: கேப்டன் மில்லர் கதை என்னுடையது, அசிங்கமா இருக்கு! வேல ராமமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

‘பட்டத்து யானை’ என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர்,

தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

கேப்டன் மில்லர் படத்தின் கதை

தாங்கள் கட்டிய கோயிலுக்குள் செல்ல முடியாமல் மன்னர் ஆட்சியில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர். அதனைப் பொறுக்க முடியாமல் பட்டாளத்தில் ஆங்கிலேய படையில்  சேர்ந்தால் மரியாதை கிடைக்கும் என அங்கு செல்கிறார் தனுஷ். ஆனால் அங்கோ ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி வழங்கப்படுகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் ஊர் திரும்பும் தனுஷை கிராமத்து மக்கள் ஊரை விட்டு துரத்துகிறார்கள்.

இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கை வாழும் அவரை புரட்சிக் கூட்டம் அரவணைக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்கிறார். இதனிடையே மன்னர் ஆட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது. அதனைப் பொறுக்காத  மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் கூட்டம் திருடச் செல்கிறது. சென்ற இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கும் நிலையில் ஆங்கிலேயர் – மன்னர் பகைக்கு நடுவே மத்தளம் பாறை மக்கள் பந்தாடப்படுகிறார்கள். யாரால் வெறுத்து துரத்தப்பட்டாரோ அந்த மக்களை காக்க கேப்டன் மில்லர் ஆக  தனுஷ் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.

திருடப்பட்ட கதையா கேப்டன் மில்லர்?

தற்போது கேப்டன் மில்லர் படத்தின் கதை தான் எழுதிய புத்தகத்தில் இருந்து திருடப்பட்டது என்று நடிகர் வேல ராமமூர்த்தி தெர்வித்துள்ளார். குற்றப் பரம்பரை, அரியநாச்சி, கருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட நாவல்களை நடிகர் மற்றும் எழுத்தாளரான வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். இவரது குற்றப் பரம்பரை படமாக எடுக்கும் முயற்சியில் பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாலாவுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது பேட்டி ஒன்றில் வேல ராம மூர்த்தி பட்டத்து யானை என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“நான் எழுதிய பட்டத்து யானை நாவலை திருடி கேப்டன் மில்லர் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். புகார் தந்தாலும், வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள்.

பேர்,ஊர், சீக்வன்ஸ் போன்றவற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் முன்னேற்பாட்டு யுக்திகள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது“  என்று இந்த பேட்டியில்  வேலராமமூர்த்தி கூறியுள்ளார்

Source link