ஐ.பி.எல் 2024:
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டி இன்னும் இரண்டு நாட்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், எல்லா ஆண்டுகளும் டிக்கெட் விற்பனையில் ஏதோ மோசடி நடக்கிறது என்பது போன்ற பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் தான் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்க இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை வலுப்படுத்தியுள்ளது. அதேபோல், பந்து வீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ், அல்ஜாரி ஜோசப், ரீஸ் டாப்லி, மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பதால் அந்த அணி பந்து வீச்சில் வலிமையுடன் இருக்கிறது. அதே நேரம் அந்த அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச ஆடும் 11 வீரர்கள்:
சென்னை அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷர்துல் சாஹர், மகேஷ், தீபக் தாகூர் தீக்ஷனா.
பெங்களூரு அணி:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ன் ஷர்மா, ரீஸ் டோப்லி, மொஹம்மத் சிப்லி, , ஆகாஷ்தீப்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
மேலும் காண