தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தேசிய படைப்பாளிகள் விருதை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். படைப்பு திறன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய படைப்பாளிகள் விருது என்றால் என்ன?
சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக உலக பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் உள்ள லட்சக்கணக்கான டிஜிட்டல் படைப்பாளிகள் ஃபேஷன், தொழில்நுட்பம், பொது அறிவு, கல்வி, பயணம் மற்றும் பல்வேறு தலைப்புகளில் உள்ளடக்கத்தை உருவாக்கி வருகின்றனர்.
எனவே, நாட்டில் வளர்ந்து வரும் இந்தப் புதிய தொழிலைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு முதல் விருதுகளை வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த வகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.
அப்போது, ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருதை பெற வந்த ஜான்வி சிங், பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார். பதிலுக்கு, பிரதமர் மோடியும் அவரின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
#WATCH | Delhi: At the first-ever National Creators Award, Prime Minister Narendra Modi presents the Heritage Fashion Icon Award to Jahnvi Singh at Bharat Mandapam. pic.twitter.com/cjzTGm7vbJ
— ANI (@ANI) March 8, 2024
தேசிய படைப்பாளர் விருது 2024: வெற்றியாளர்கள் பட்டியல்
மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்பாளி – பெண் விருது: ஷ்ரத்தா ஜெயின் (அய்யோ ஷ்ரத்தா)
மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்பாளர் – ஆண் விருது: ஆர்.ஜே. ரவுனாக் (பாவா)
ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது: ஜான்வி சிங்
உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளிக்கான விருது: கபிதா சிங்
கிரீன் சாம்பியன் விருது: பங்தி பாண்டே
சிறந்த கதைசொல்லி: கீர்த்திகா கோவிந்தசாமி
ஆண்டின் சிறந்த கலாச்சார தூதர் விருது: மைதிலி தாக்கூர்
தொழில்நுட்ப பிரிவில் சிறந்த படைப்பாளர்: கௌரவ் சவுத்ரி
சிறந்த உடல்நலம் மற்றும் உடற்தகுதி படைப்பாளர் விருது: அங்கித் பையன்பூரியா
கல்வி பிரிவில் சிறந்த படைப்பாளர் விருது: நமன் தேஷ்முக்
பிடித்த பயணத்தை உருவாக்கியவர்: காமியா ஜானி
தாக்கத்தை ஏற்படுத்தவருக்கான விருது: ரன்வீர் அல்லாபாடியா (பீர் பைசெப்ஸ்)
இதையும் படிக்க: Rajasthan Electric Shock: 14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!
மேலும் காண