Karur Corporation ordinary meeting and budget meeting was held today – TNN


தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் வாயில் கறுப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சாதாரண கூட்டம் முடிந்தபின், பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. மாநகராட்சி வரவு, செலவு அறிக்கையை மேயர் கவிதா கணேசன் உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.
 
 

கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி மாநகராட்சி உட்பட்ட பேருந்து நிலையத்தில் சொந்த வசூலை மாநகராட்சியே செய்யலாம் என ஆலோசனை வழங்கினார். அதற்கு மாநகராட்சியில் போதிய ஆட்கள் இல்லாததால் தற்போது சுங்க வசூலை மற்றவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சியின் மேயர் கவிதா கணேசன் தெரிவித்தார். அதை தொடர்ந்து சில மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கையை முன்வைத்து பேசத் தொடங்கினர். அனைத்திற்கும் மாநகராட்சி மேயர், துணைமேயர், ஆணையர் உள்ளிட்டோர் தகுந்த பதிலை அளித்தனர்.
 

 
அதை தொடர்ந்து மாநகராட்சியின் துணை மேயர் பேசுகையில், தற்போது திருமாநிலையூர் முதல் t.செல்லாண்டிபாளையம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருவதால் குடி தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பத்து நாட்களாக பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக ஆணையரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆணையர் விரைவாக அனைத்து இணைப்புகளும் சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் நாளை பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்டத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய நிலையில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 

குறிப்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி மற்றும் திமுக  மாமன்ற உறுப்பினர், ஆணையர் உள்ளிட்ட இடையே மாதந்தோறும் காரசார விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத நடைபெற்ற கூட்டத்தில் அது போல் ஏதும் நடைபெறவில்லை. அதேபோல் அனைத்து மாமன்ற உறுப்பினருக்கும் 2023- 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் புத்தகம் வழங்கப்பட்டது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டு உள்ளடக்கிய மாநகராட்சியாகும். இதில் இரண்டு மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரும் இன்று மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து, வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
 

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாமன்ற அதிமுக உறுப்பினர்கள் எந்த ஒரு கேள்வியோ, புகாரையோ எழுப்பவில்லை. மாறாக கருப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அதேபோல் கூட்டம் முடிந்த பிறகு விறு விறு என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் வெளியேறினர். பின்னர் மாவட்ட நுழைவாயிலில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 

மேலும் காண

Source link