ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்

கடலூர் சாலையில் உள்ள டி. குண்ணத்தூர் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, திருவாமாத்தூர் கண.சரவணகுமார் ஆகியோர்கள் கள ஆய்வின் போது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன் பேசுகையில்;

திருக்கோயிலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி. குண்ணத்தூர் கிராமத்தில் கள ஆய்வின் போது ஏரிக்கரையின் எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பார்த்தவாறு கொற்றவையின் சிற்பம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தின் உயரம் 6 அடியும் அகலம் 2 அடியும் உள்ள பெரிய சிலையாகும். இச்சிற்பத்தில் கொற்றவையின் வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மார்பு மற்றும் இடுப்பில் உடையுடனும் காட்டப்பட்டுள்ளது. உடைகள் நேர்தியாக மடிப்புகளுடன் காணப்படுகிறது. தோள்களில் வளைகள், காலில் கழலுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு

எட்டு கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புறம் ஒரு கை அபய முத்திரையும் மற்றொரு கை அம்பு ஏந்தியும், மற்றொரு கை வாள் ஏந்தியும் மற்றொரு கை சங்கு ஏந்தியும் உள்ளது. இடப்புறம் உள்ள கை இடுப்பில் வைத்தவாறும் மற்றொரு கை வில் ஏந்தியும் மற்றொரு கை கேடயம் ஏந்தியும் மற்றொரு கையில் சக்கரமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் இடையில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத்தலையின் மீதுள்ளவாறு காட்டப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் சுட்டிக்காட்டிய இலக்கணத்துடன் இக்கொற்றவை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொற்றவை அதன் சிற்ப அமைப்பும் அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளை கொண்டு அதன் காலத்தை 6 ஆம் நூற்றாண்டின் இறுதி என கூறலாம். இச்சிற்பத்தின் வலப்புறம் உள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு ஒரளவு மட்டும் படித்தறியும் படி அமைந்துள்ளது.

தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டில்

இக்கல்வெட்டில் பெருவா இலார் மகன் தோறன் என்று ஊகித்து படித்தறியமுடிகிறது. இந்த கொற்றவை சிற்பத்தை செய்தளித்தவரின் பெயராக இருக்கக்கூடும். இவ்வூருக்கு அருகில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் காளியம்மன் கோயில் முகப்பு சுவரில் விக்கரம சோழானின் 17 ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1135) அறிஞ்சி மகள் உஞ்சியாள் என்பவர் மண்டபம் செய்வித்ததாக குறிப்பிடும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. திருக்கோயிலூர் பகுதியில் தான் தமிழ்நாட்டில் அதிக அளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இப்பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இது போன்ற அரிய சிற்பங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Budget 2024 LIVE: சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது மத்திய இடைக்கால பட்ஜெட்.. தகவல்கள் உடனுக்குடன்

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
1 dollar minimum deposit casino uk, free real online pokies united states and 21 dukes casino review, or bet365 united…
place a bet on ascot races grand national 2026
hunderennen online basketball wetten heute (Corinne)
besten wettanbieter Here is my web site; 1xbet basketball wetten
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

“மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது”- விஜய் குறித்து தமிழிசை | tamilisai soundararajan about vijay as a pm | ACTPnews.com

Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names – ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்! | ACTPnews.com

Is Kiran Kumar Reddy the Governor of Tamil Nadu? ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா? | ACTPnews.com

Trump Announces “Biggest Oil Deal In World History” With Venezuela 65 பில்லியன் பேரல் எண்ணெய்… டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன? | ACTPnews.com

'ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க அரசு முயல்கிறதா?'-தவெக எம்எல்ஏ பேச்சுக்கு டிடிவி கண்டனம் | ACTPnews.com

virtual poker with friends uk, new zealandn online real money poker sites and state gambling revenue australia, or trusted uk…