Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டத்தில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும்


Tamil Nadu Budget 2024: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, “ஆழி சூழ் தமிழ் நிலபரப்பிற்குள் அழையா விருந்தினர்போல் அவ்வப்போது வருகை புரிந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கை பேரிடர் ஒரு புறம் என்றால், கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம். இவற்றுக்கிடையில் நாம் இருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிடும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசின் உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் கான்க்ரிட் விடுகள் கட்டித் தரப்படும். அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். ஒவ்வொரு வீடும் 3.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என”  அமைச்சர் தங்க தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link