Chirag-Satwik Advance To Second Round Of India Open 2024 Latest Tamil News

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி சீன தைபேயின் ஃபாங்-சிஹ் லி மற்றும் பாங்-ஜென் லி ஜோடியை 21-15, 19-21, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. 
சாத்விக் மற்றும் சிராக் ஜோடி வெற்றி:  
முதல் ஆட்டத்தில், இரு ஜோடிகளும் ஆரம்ப கட்டங்களில் சமமாக புள்ளிகளை பெற்றனர். அதன்பிறகு, எழுச்சியுற்ற இந்திய ஜோடி, தைபே ஜோடியை பந்தாட தொடங்கினர். இடைவேளைக்குப் பிறகு எந்த அச்சமும் இல்லாமல், உலகின் இரண்டாம் நிலை இந்திய ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து இறுதியில் 21-15 என்ற புள்ளிக்கணக்கில் தொடக்க ஆட்டத்தை வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில், தைபே ஜோடி 5-1 என ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. அதன்பிறகு, சிறப்பான ஆட்டத்தை கையில் எடுத்த சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி விரைவாக ஐந்து தொடர்ச்சியான புள்ளிகளைப் பெற்று ஸ்கோரை 12-12 என சமன் செய்தனர்.
சாத்விக் மற்றும் சிராக் தொடர்ந்து எதிரணிக்கு புள்ளிகளை விட்டுகொடுத்தும், எடுப்பதுமாய் சிறப்பாக ஆடி கேமை 21-19 என்ற கணக்கில் எடுத்தனர். இறுதி ஆட்டத்தில், இந்திய ஜோடி மீண்டும் தங்கள் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக்குகளால் தைபே ஜோடியை 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னெறினர். 
வெற்றிக்குப் பிறகு, சாத்விக் கூறுகையில், “நாங்கள் விளையாடும் விதம் மற்றும் நாங்கள் தொடங்கிய விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் எங்களது ஆட்டத்த்ல் நிறைய உழைத்துள்ளோம். இங்கு எங்கள் முதல் வெற்றியைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நாங்கள் போட்டியில் முன்னேறுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார். 
கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி: 
முன்னதாக, 2021 உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் தொடக்கச் சுற்றில் ஹாங்காங்கின் லீ செயுக் யீயுவிடம் 22-24, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். லீ செயுக்கிற்கு எதிரான நான்கு போட்டிகளில் ஸ்ரீகாந்த் பெற்ற மூன்றாவது தோல்வி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
பெண்கள் இரட்டையர் பிரிவு: 
பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 5-21, 21-18, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஜோங்கோல்பன் கிதிதரகுல்-ரவிந்தா பிரஜோங்ஜாய் ஜோடியிடம் தோல்வியடைந்தது. மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற அஷ்வினி பட்-ஷிகா கவுதம் ஜோடி 25-218, 21-218 11-21. அவர்கள் 13-21, 3-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் சோ-யோங் மற்றும் காங் ஹீ-யோங் ஜோடியிடம் தோற்றனர்.
மறுபுறம், ஆண்கள் இரட்டையர் ஜோடி கிருஷ்ண பிரசாத் கரகா மற்றும் கே சாய் பிரதிக் ஜோடி ஜப்பானின் கென்யா மிட்சுஹாஷி மற்றும் ஹிரோகி ஒகாமுரா ஜோடியிடம் 14-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு: 
மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான தென் கொரியாவின் அன் சே-யங் 14-21, 21-11, 21-11 என்ற செட் கணக்கில் 3 முறை இந்திய ஓபன் சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்த்து வெற்றி பெற்றார். அதேபோல், இரண்டு முறை முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமகுச்சி, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 26-24, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜொனாதன் கிறிஸ்டி 21-13, 21-7 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் அங்கஸ் எங் கா லாங்கை தோற்கடித்தார்.

Source link