Sunny Leone hosting Splits Villa season 15 to telecast in Tamil details


இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமானது மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு 2கே கிட்ஸ் மற்றும் ஜென் z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்களின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண்கள், பெண்களைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதைவிடவும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். சன்னிலியோனின் உடைக்காகவும் அவரின் அழகுக்காகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை காண்பவர்கள் பலர்.
இந்த நிலையில்,  பிரபல டேட்டிங் நிகழ்ச்சியான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் சமீபத்திய சீசனுக்கு தயாராகிவிட்டார் சன்னி லியோன். (Splitsvilla X5) ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சியின் 15ஆவது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ முன்னதாக வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.
அல்தாஃப் ராஜா மற்றும் ஆகாசா சிங் பாடியுள்ள இந்தப் பாடல், ‘ஸ்பிளிட்ஸ்வில்லா’ சீசனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காண்போருக்கு புரியவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சியின் 15ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்பை இந்த ஆந்தம் கிளறியுள்ளது. இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன், இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
 

மேலும், ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15ஆவது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. MTV ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Cooku With Comali 5: குக்கர், சிரிப்பு 2 சத்தமும் கேட்கும்.. மாதம்பட்டி ரங்கராஜ் – தாமு இணையும் குக்கு வித் கோமாளி 5 ப்ரோமோ!
Priyamani: இஸ்லாமிய கணவர்.. மதம் கடந்த திருமணத்தால் கடும் விமர்சனங்கள்.. நடிகை பிரியாமணி வேதனை!

மேலும் காண

Source link