Mamallapuram Sculptors Made 44 Huge Teak Wooden Doors For Ram Temple In Ayodhya, Uttar Pradesh

அயோத்தி ராமர் கோயில் – Ram Temple Ayodhya 
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
மரக்கதவுகள்:
உத்தரபிரதேச மாநிலம் ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில், ராமருக்கு தரை தளத்தில் இருந்து 44 வாசல்களை கொண்டு, ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் 1600 சிற்பக் கலைஞர்கள் மூலம் ரூ. 1800 கோடி மதிப்பில்,  பிரமாண்டமாக கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவரைகள் அமைக்கப்படுகிறது. உலக அளவில் உள்ள இந்து மக்கள் உள்ளிட்ட பலரும் வியந்து பார்க்கும் வகையில், அடுத்தாண்டு ஜனவரி 22ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த உத்திரபிரதேச அரசு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகளை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர், அயோத்தி ராமர் கோயில் வளாகம் மற்றும் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில் உள்ள மானசா சிற்பக்கலைக் கூடத்தில் இரவு, பகலாக அழகுற வடிவமைத்து முடித்தனர். 

அதில், இரண்டு யானைகள் வருபவர்களுக்கு துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் கதவுகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அழுகுர வடிமைக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய தேக்கு மரங்களை கொண்டே இப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது, செய்து முடிக்கப்பட்ட மரக்கதவுகளை அயோத்தி ராமர் கோயிலில் மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், சக மரச்சிற்பக்கலைஞர்கள்  இணைந்து இந்த பணியை செய்து முடித்துள்ளனர்.

 இது போக  பிரதாண வாயிலுக்கு,  எட்டடி உயரம் 12 அடி அகல அளவில் மயில்கள் சிற்பங்கள் அலங்காரத்துடன்  நான்கு   மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன.  முகப்பு மண்டபம் மேல் தளத்திற்கு செல்லும் படிகள் துவங்கமிடம் பொருட்கள் இருப்பாரைகள் ஆகியவற்றுக்கு வெவ்வேறு அளவிலான யானை சிற்பங்கள் அலங்காரத்துடன் இரண்டு மடிப்புடன் செய்யப்பட்டுள்ளன.  கதவுகளுக்கு வேறு நிறுவனம் சார்பில்  செப்பு தகடுகள் பொருத்தி தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.  ராமர் சிலையை கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு செல்லக்கூடிய  சிறிய பல்லாக்கை  செய்து முடித்து கொடுத்ததாகவும்  சிற்பக் கலைஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Source link