ப்ரோ கபடி லீக் மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது என்றே கூறவேண்டும். 10வது சீசனில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ளன. இதில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினைப் பெறும் என்பதால், அனைத்து அணிகளும் ஒரு போரைப் போலவே ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கி வருகின்றது. இந்த சீசனின் தொடக்கம் முதல் முதல் பாதி வரை மிகவும் பரிதாபமாக இருந்த அணி என வரிசைப் படுத்தப்பட்டால் அதில் தமிழ் தலைவாஸ் அணிக்கு கட்டாயம் இடம் இருக்கும். தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி, சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் தோல்வி, புள்ளிப்பட்டியலில் 11வது இடத்திலேயே தேங்கியது என மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.
தமிழ் தலைவாஸ் அணி ஒரு அணியாகப் பார்க்கும்போது மிகவும் பலமான அணியாக இருந்தது. ஆனால் அந்த அணி களத்தில் தங்களது திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதே ஒரு பிரச்னை இருந்துவந்தது. ஆனால் தமிழ் தலைவாஸ் அணி மீது அனைவருக்கும் இருந்த ஒற்றை நம்பிக்கை கடந்த சீசனில் இதேபோல் முதல் பாதி ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்த அணி, அதன் பின்னர் சிறப்பான வெற்றிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் தமிழ் தலைவாஸ் அணி கடந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு புது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் பலமான வீரராக இருந்தாலும் அவர் ரெய்டர் வரும்போதெல்லாம் ஆதிக்கம் செலுத்தி எதிரணியின் கேம் ப்ளேனையே சுக்கு நூறாக சிதைத்து வருகின்றனர். டிஃபெண்டர்களில் சாகர், ஷகில் குலியா, அபிஷேக், மோகித் ஆகியோரது ஆட்டத்தின் முன்னாள் எதிரணியின் தலைசிறந்த ரெய்டர்களால் கூட ஆதிக்கம் செலுத்த முடியாமல் தத்தளித்து வருகின்றனர். ரெய்டர்களில் அஜங்கியா பவார், நரேந்தர் ஆகியோரது ஆட்டம் பார்க்கவே ரசிகர்களுக்குள் உணர்ச்சி வெள்ளத்தை உண்டாக்கும் அளவிற்கு சிறப்பாக விளையாடி அணிக்கு வலிமை சேர்த்து வருகின்றனர். 
தமிழ் தலைவாஸ் அணி கடைசி 4 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதில் மிகவும் முக்கியாமான வெற்றியாகப் பார்க்கப்படுவது தமிழ் தலைவாஸ் அணி பெற்ற ஹாட்ரிக் வெற்றிதான். தமிழ் தலைவாஸ் அணி கடந்த 4 போட்டிகளில் வெளிப்படுத்திய ஆகச்சிறந்த ஆட்டத்தினால் எதிரணியை  10 முறை ஆல் அவுட் செய்துள்ளது. அதேநேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்த ஆல் அவுட்டும் பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. 

தமிழ் தலைவாஸ் அணி கடந்த நான்கு போட்டிகளில் பட்னா பைரேட்ஸ், பெங்களூரு புல்ஸ், தெலுகு டைட்டன்ஸ் மற்றும் யு மும்பா அணிகளை எதிர்கொண்டது. இதில், பட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளை தலா இரண்டு முறையும், தெலுகு டைட்டன்ஸ் மற்றும் யு மும்பா அணியை தலா மூன்று முறையும் ஆல் அவுட் ஆக்கி அசத்தியுள்ளது. லீக்கின் தொடக்கத்தில் ஆல் அவுட் ஆகிவந்த தமிழ் தலைவாஸ் அணி தற்போது எதிரணியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்பாக விளையாடி அசத்தி வருகின்றனர். தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பலமான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வரும் 31ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. 

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed