India Vs England 1st Test Match Preview | India Vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன?

 
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
IND vs ENG நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 31 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேநேரம், இங்கிலாந்து அணி 50 போட்டிகள் வெற்றி பெற்றிருக்கிறது. 50 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. முதன் முதலில் இரு அணிகளும் விளையாடிய போட்டி கடந்த 1932 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல்,கடைசியாக இரு அணிகளும் சேர்ந்து விளையாடிய போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது.
 
IND vs ENG, 1வது டெஸ்ட் ஒளிபரப்பு விவரங்கள்:
தேதி: ஜனவரி 25 முதல் ஜனவரி 29 வரை.
நேரடி ஒளிபரப்பு: ஜியோ சினிமா மற்றும் Sports18
 
ஆடும் லெவன் வீரர்கள்:
விராட் கோலிக்கு பதிலாக  ரஜத் படிதார் இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா,கே.எஸ்.பரத், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது  ரஜத் படிதார்.
இங்கிலாந்து அணி:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க் வுட், ஜேக் லீச்
மேலும் படிக்க: BCCI Awards 2024: இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற அஸ்வின்.. விருது பெற்றவர்களின் முழு விவரம் உள்ளே..
 
மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்- ராகுல் ட்ராவிட்!
 

Source link