Rajinikanth: போயஸ் கார்டனில் பரபரப்பு; சசிகலா வீட்டிற்கு எண்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


<p>தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் வி.கே. சசிகலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.&nbsp;</p>
<p>போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே,&nbsp; ஜெயலலிதாவின் நெருங்கி தோழியான வி.கே சசிகலா புதிய பங்களா வீடு கட்டினார்.&nbsp; இந்த புதிய வீட்டிற்கு ஜனவரியில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. ஆனால் அவர் அப்போது குடியேறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தான் கட்டிய புதிய பங்களாவுக்கு குடியேறினார்.&nbsp;</p>
<p>புதுமனை புகுவிழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் செல்லமுடியவில்லை. அதனால்தான் இன்று சசிகலாவின் வீட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றதாக கூறப்படுகின்றது.&nbsp;</p>

Source link