நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியபடி ஜாலியாக உரையாடும் வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
50 சதவீத ஷூட்டிங் ஓவர்
நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முன்னதாக அஜர்பைஜானில் நிறைவு பெற்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் 35 நாள்கள் தேவைப்படுவதாகக் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் அஜித்துக்கு மேற்கொள்ளப்பட்ட திடீ உடல்நலக் குறைவு, மைனர் அறுவை சிகிச்சை, நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவு ஆகியவை அவரை சோர்வடையச் செய்ய, சில நாள்களுக்கு முன் இவற்றிலிருந்து கொஞ்சம் மீண்டு, தன் பைக் பயணத்தினை மீண்டும் உற்சாகமாக அவர் தொடங்கினார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை சற்றே ஆறுதல் அடைய வைத்தன.
மேலும் இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியானது. அஜித்தின் 63ஆவது திரைப்படமாக உருவாகும் இப்படம், 2025ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை டபுள் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அஜித் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியபடி ஜாலியாக உரையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “சரியா ஃபூல்ஸ் டே அன்னிக்கு வந்து இருக்கீங்க” என தன்னைத் தானே கலாய்த்தபடி தன் ரசிகருடன் அஜித் உரையாடுகிறார்.
AK : Correct ah Fools Day Annaiku Vanthu Irukkinga 😂Thala #Ajithkumar Always Kind Towards His Fans 🤩🤗#VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/4I3g7EMxYn
— Kolly Corner (@kollycorner) April 2, 2024
நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு இதயங்களைப் பறக்கவிட்டு வருகிறார்கள்.
மேலும் காண