Thiruvarur: ஆரூரா, தியாகேசா.. கோலாகலமாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்..!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. உலகம் போற்றும் சிறப்பு தலமாக திகழும் இக்கோவில்  33 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது அதேபோல தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளமும் மிகப்பெரியது.

இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தேர் திருவிழா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம்,  இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் பெருமை வாய்ந்தது. இந்தத் தேரின் உயரம் 96 அடியும் 350 டன் எடை கொண்டதாகும். எல்லா ஊர்களில் உள்ள தேரை விட இந்தத் தேர் பட்டை வடிவில் 20 அடுக்குகளை கொண்ட தேராகும். இந்த தியாகராஜர் கோவிலில் உள்ள அனைத்து சாமிகளின் சிலை இந்த ஆழித்தேரில் சிற்பமாக காணலாம்.  திருவாரூர் என்றாலே தேர் அழகு என்பார்கள்.

அப்படி சிறப்புமிக்க இந்த தேரோட்டம் விழா வருடா வருடம் பங்குனி உத்திரத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும்.   அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழித்தேரோட்டத்திற்காக பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கடத்த கடந்த 27 ஆம் தேதி கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கடந்த ஒரு மாதமாக தேரின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.  இதில் இரவு,பகல் பாராமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்து நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேரானது அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய திருவிழா ஆன ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது.   திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, வேளாகுறிச்சி ஆதினம் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் பொழுது ஆரூரா, தியாகேசா என முழக்கங்கள் இட்டு ஆழித்தேர் நகர்ந்து வரும் காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.  500 மீட்டர் நீளமுள்ள நான்கு வடங்களை பக்தர்கள் முழக்கங்கள் இட்டு இழுத்துச் சென்றனர். அதேபோல இரண்டு புல்டோசர் வாகனமும்,  600 புளியமர முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணி அளவில் சுப்பிரமணியர் தேரும், அதனைத் தொடர்ந்து இந்த ஆழி தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் இந்த ஆழி தேரோட்டத்தை தொடர்ந்து சரியாக 11 மணிக்கு அம்பாள் தேரும், ஒரு மணிக்கு சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்படும். இந்த ஆழித்தேரும் அம்பாள் தேரும் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் நிலையத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தேரோட்டத் திருவிழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில்  2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேபோல நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் ட்ரோன் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது  காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் நான்கு வீதிகளிலும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது

குறிப்பாக திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட  வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு பின்புறம் நடமாடும் மருத்துவ குழுவினர் அடங்கிய அவசர ஊர்தி வாகனங்கள் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Source link