ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேபோல், மார்ச் 24 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
உடற்தகுதி சான்றிதழ் பெற்ற கே.எல்.ராகுல்:
இந்நிலையில் தான் பெங்களூர் கிரிக்கெட் அகாடமி லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு உடற்தகுதி சான்றிதழை வழங்கியுள்ளது. அதேபோல் ஆரம்ப போட்டியில் அவரை விளையாட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரம் கூறுகையில், “அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார், வரும் நாட்களில் ஐபிஎல் தொடரில் சேரலாம். அவருக்கு தொடை பகுதியில் வலி ஏற்பட்டு ஊசியும் போடப்பட்டது. இந்நிலையில் தான் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் என்.சி.ஏ அவருக்கு உடற்தகுதி சான்றிதழை வழங்கியுள்ளது. இருப்பினும், அவர் உடனடியாக விக்கெட் கீப்பிங் பணியை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ரஞ்சி டிராபி போட்டியில் கடைசி இரண்டு நாட்களை தவறவிட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் ஐ.பி.எல் போட்டியில் விளையாட தகுதி உடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கே.எல்.ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதன் பின்னர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் பேட்டிங் செய்யும் போது கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் வலி ஏற்படுவதுதான்.
காயம் முழுமையாக குணமடையாத நிலையில் இதுதொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதற்காக கே.எல்.ராகுல் லண்டன் சென்றுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவர் உடற்தகுதி சான்றிதழ் பெற்று மீண்டும் விளையாட உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
மேலும் காண