தமிழ்நாடு:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 நாளில் தமிழ்நாட்டில் ரூ.2.10 கோடி பறிமுதல்
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸுக்கு நிரந்தர தடை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகை தொகுதியின் வேட்பாளராக வை.செல்வராஜ்-ம், திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே. சுப்பராயன்-ம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
இஸ்லாமியர்களை பயமுறுத்தி சிஏஏ ஆயுதத்தை கையில் எடுத்த திமுக கூட்டணி – டிடிவி தினகரன்
தமிழ்நாடு பா.ஜ.க.வின் அறிவிக்கப்படாத தலைவராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என திமுக எம்.பி வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
பிரதமர் மோடி இன்று சேலம் வருவதையொட்டி,  பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

இந்தியா: 

ஹிமாச்சல் மாநிலத்தில் 6 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரசு அரசாங்கம் நீடிக்கிறது.
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். 
தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, 6 மாநில உள்துறை செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்களுக்கான பிரத்யேக எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட, எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிடுகிறது. 

உலகம்: 

பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல்.
வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புதி வெற்றி – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் விமானத்தில் இருந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

விளையாட்டு: 

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல்: ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு.
இந்திய மல்யுத்த சம்மேளன இடைக்கால கமிட்டி கலைப்பு – ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு.
வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.
ஐபிஎல் 2024: கொல்கத்தா அணியின் பயிற்சு முகாமில் இணைய்ந்தார் மிட்செல் ஸ்டார்க்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு உடற்தகுதி சான்றிதழை பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

 

Published at : 19 Mar 2024 06:54 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed