நான் செஞ்ச பெரிய தப்பு.. நடிக்க வந்ததுதான்.. ரகுவரன் நினைவு நாளில் சில நினைவுகள்..

தென்னிந்திய சினிமாவில் ஈடு இணை செய்ய முடியாத தன்னிகரில்லா ஒரு அக்மார்க் வில்லன் என்றால் அது ரகுவரனை தவிர யாராக இருக்க முடியும். பெரிய அளவில் எல்லாம் அவருக்கு வசனங்கள் இருக்காது என்றாலும் அவரின் கொடூரத்தனத்தை தனது உணர்ச்சி மூலமும் முக பாவனைகள் மூலமும் வெளிப்படுத்தி எதிராளிகளை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அச்சப்பட வைக்கும் திறமையாளன்.

300க்கும் மேற்பட்ட படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் வில்லாதி வில்லனாக விளங்கிய ரகுவரன் 2008-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் 16ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவர் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம் :

நடிக்க வருவதற்கு முன்னரே தனியாக ஒரு மியூசிக்கல் பேண்ட் வைத்திருந்தார். அவர் ஒரு கிடாரிஸ்ட் என்றாலும் அவருக்கு 23 இசை வாத்தியங்களை வாசிக்க தெரியும். நடிக்க தைரியம் இல்லாததால் பல  மேடை நாடகங்களுக்கு எல்லாம் எழுதியுள்ளார். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் எதிர்பாராத விதமாக நடிக்கவேண்டிய காட்டாயம் ஏற்பட கடைசியில் அதுவே நிலையானது.

ரகுவரன் என்றுமே தனிமை விரும்பி. ரகுவனுக்கும் ஒரு செல்ல பெயர் இருக்கிறது. அவருடைய அம்மா மட்டுமே அவரை செல்லமாக தம்பு என அழைப்பாராம். சமஸ்கிருதத்தில் தம்பு என்றால் என செல்ல மகனே என அர்த்தமாம். ரகுவனுக்கு டான்ஸ் ஆடுவது தான் மிக மிக கடினமான ஒரு விஷயம். தத்துவம் குறித்து பல கலந்துரையாடல்களை பல ஊர்களில் பல கல்லூரிகளில் நிகழ்த்தியுள்ளார். அவருடைய வீட்டிலேயே சொந்தமாக ஒரு மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் வைத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு மிக சிறந்த வில்லன் என்றால் அது ரகுவரன் மட்டுமே. இருவருமே டிசம்பர் மாதம் பிறந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் புரிதல் நன்றாக இருக்கும். அது காட்சியில் மிக அழகாக வெளிப்படும். அதே போல ரஜினிகாந்திடம் ரகுவரனுக்கு பிடிக்காத ஒன்று என்றால் அவர் அதிகம் யோசிப்பதுதானாம்.

ரகுவரன் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றால் அது சத்யராஜ் மற்றும் நிழல்கள் ரவி. ஹீரோவை தவிர மற்ற எல்லா கேரக்டர்களிலும் நடிக்கவே அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

வாழ்க்கையிலே அவர் செய்த மிகப்பெரிய தவறாக நினைப்பது நடிக்க வந்ததுதானாம். நடிக்க வந்ததால் கிடைத்த சந்தோஷத்தை காட்டிலும் ஒரு சாதாரண மனிதனாக பயிரிட்டு அதன் மூலம் வரும் நெல்லை மூட்டையில் சுமந்து சென்று விற்று அதில் வரும் தொகை கொஞ்சமாக இருந்தாலும் அதை வைத்து சாப்பிட்டு நிம்மதியா மழை வரவேண்டும் என தூங்கி எழ வேண்டும். என்னை சுற்றிலும் ஆடு, மாடு, கோழி எல்லாம் இருக்க வேண்டும். அது தான் வாழ்க்கை என்று ஒரு நேர்காணலில் பேசியிருப்பார்..

நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித்,  தனுஷ், விக்ரம், சூர்யா, விஷால் என பல நடிகர்களுடனும் இணைந்து நடித்த ரகுவரன் கடைசி வரையில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடித்ததே இல்லை.

Source link