Tamil Nadu latest headlines news April 23th 2024 flash news afternoon details today


Edappadi Palanisamy:“இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் அறிக்கை
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் படிக்க..
Yellow Alert: நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை – தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு, கர்நாடாகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் அதிகளவு வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
மிஸ் கூவாகம் அழகிப்போட்டி… முதல் பரிசைத் தட்டிச் சென்ற ஈரோடு திருநங்கை மருத்துவர் ரியா!
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கு நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிஒ போட்டியில் விதவிதமான ஆடைகளை அணிந்து திருநங்கைகள் ஒய்யாரமாக ரேம்ப் வாக்கில் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகு கவர்ந்தது. இந்த ஆண்டின் மிஸ் கூவாகம் பட்டத்தினை உதவி மருத்துவரான ஈரோட்டைச் சார்ந்த ரியா முதல் இடத்தை பிடித்தார். மேலும் படிக்க…
Mettur Dam: இரண்டாவது நாளாக தொடர்ந்து 57 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 79 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க..
சூரிய அஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா? இன்று குமரியில் நிகழும் அதியசம்!
சித்ரா பௌர்ணமி என்பது இந்துகள் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான நாள்களில் ஒன்று. இன்று சிவனுக்கு உகந்த நாளாகவும், இன்றுதான் பூமியில் அனுமன் அவதரித்த நாள் என்றும் கூறப்படுகிறது. இதுபோக, இன்றைய நாளில்தான் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். விழுப்புரம் அடுத்த கூவாகத்தில் திருவிழா என பல்வேறு இந்து சமய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link