On Camera Telangana Cops Drag Protesting Student By Hair Shocking Video | Shocking Video: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி! தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்த சென்ற பெண் காவலர்கள்

Shocking Video: தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின்  தலைமுடியை பிடித்து காவலர்கள் இரண்டு பேர் இழுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
மாணவிக்கு நேர்ந்த கொடூரம்:
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.  
இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் சாலையை நோக்கி சென்றிருப்பதாக தெரிகிறது. அந்த நேரத்தில், இரண்டு பெண் காவலர்கள், அந்த மாணவியை பின் தொடர்ந்தனர்.
பின்னர், மாணவி ஓடி செல்ல, இவருக்கு பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் காவலர்கள் மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.  இந்த சம்பவத்தின் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
வீடியோ வைரல்:
அந்த வீடியோவில், மாணவி ஒருவர் ஓடி சென்றிருக்கிறார். அப்போது, இவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் காவலர்கள்  மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றிப்பது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.  இந்த வீடியோவிற்கு அரசியில் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Student was Chased and dragged by hair, by two cops for reportedly protesting against allocating land of Professor Jayashankar Telangana State Agricultural University to the new Telangana High Court. Students want the GO55 to be withdrawn by Govt.Cyberabad police said, “A Video… pic.twitter.com/9sNciJe9VH
— Naveena (@TheNaveena) January 24, 2024

இச்சம்பவம் குறித்து பேசிய ராஜேந்திர நகர் காவல் ஆய்வாளர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை தடுப்புக் காவலில் வைத்திருந்தோம். சில போராட்டக்காரர்கள் சாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றிருக்கிறார்.  
காவலர்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து நடந்ததை கூறினர். தனிப்பட்ட காரணம் எதுவும் என்று பெண் காவலர்கள்  ஏற்றுக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவி எந்த புகாரும் அளிக்கவில்லை” என்றார்.  இதுகுறித்து பாரத ராஷ்டிர சமித்தின் தலைவரான கவிதா கண்டம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், “தெலங்கானாவில் இரண்டு பெண் காவலர்கள்,  மாணவியை தரதரவென இழுத்து சென்ற சம்பவம் கவலையை ஏற்படுத்தியதோடு, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த  சம்பவத்திற்கு தெலுங்கானா காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார். 

Source link