கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம் –   சீமான் பேச்சுக்கு விஜய பிரபாகரன் பதிலடி

அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Modi Announcement: அக்னி – 5 ஏவுகணையின் சோதனை வெற்றி.. பிரதமர் மோடி பாராட்டு!

இப்படியிருக்க, நாம் தமிழருக்கு கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும். இச்சூழலில், நாம் தமிழர் கட்சி கேட்டு பெற இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கர்நாடகா கட்சிக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான் முரசு சின்னம் குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் பேசியிருந்தார்.

Crime: பாலியல் வழக்கில் தலைமறைவான முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னுத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுத்தார்.  திமுக , அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே, பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு – உச்சநீதிமன்றம்

அண்ணன் சீமான் அவர்கள் கொட்டுமுரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்ற போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது என்று பேசினார். மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Source link