Dry weather will prevail in Tamil Nadu for the next few days next one week Weather report


தமிழகத்தில் பனிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைந்து விடும். இந்நிலையில் காலை நேரங்களில் காலை 7.30 மணி வரை பனிப்பொழிவு காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. 
வறண்ட வானிலை:
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
13.02.2024 மற்றும் 14.02.2024: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை 
தமிழக கடலோரப்பகுதிகள்: 
10.02.2024: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க 
Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி – இந்திய அணி அறிவிப்பு!
CM Stalin letter to PM: மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தருக – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
 

மேலும் காண

Source link