7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; வருகின்ற மே 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என உயர்நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு; காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்தது குறித்து காரசார விவாதம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு
திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயிலில் சென்னைக்கு 50 ரூபாயும், வேலூர் கண்ட்ரோல்மென்ட்க்கு 25 ரூபாயும் போளூருக்கு 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 53,920-ஆக விற்பனை செய்யப்பட்டது. 

இந்தியா: 

மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும்போது நிலைதடுமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்லவேளையாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். 
சத்தீஸ்கரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த தேவகவுடா பேரன் பென் டிரைவில் 3,000 ஆபாச வீடியோக்கள் – தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
குஜராத், ராஜஸ்தானில் ரூ. 105 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது.
தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில் பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன் என பிரியங்கா காந்தி கேள்வி
நேரடியாக எதிர்க்க முடியாமல் போலி வீடியோ பரப்புகின்றனர் என காங்கிரஸ் மீது மோடி தாக்கு
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் – ராகுல் காந்தி உறுதி
முதல், இரண்டாம் கட்ட தேர்தல்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு சரிவு என தகவல்

உலகம்: 

கென்யாவில் அணை உடைந்து விபத்து: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்- இதுவரை 40 பேர் உயிரிழப்பு என தகவல்.
துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ்.அமைப்பினர் 38 பேர் கைது.
மெக்ஸிகோ: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு.
சீனா, மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி

விளையாட்டு: 

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்.
ஐபிஎல் 2024: டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி
மயங்க் யாதவ் அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் – மோர்னே மோர்கல்

 

Published at : 30 Apr 2024 06:49 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link