கரூரில் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் – வழங்கப்பட்ட ஆலோசனைகள்


கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 

இதில், கரூர் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு குழு மற்றும் செலவின பார்வையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் பணிகளை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட தாசில்தார், சப் கலெக்டர் அலுவலகங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தேர்தல் பணிகள் தொய்வின்றி மேற்கொள்வதற்கான உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறியப்பட்டது. 
 

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, காணொலி கண்காணிப்பு குழு, காணொலி பார்வைக்குழுக்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்தனர். தணிக்கையின்போது கைப்பற்றப்படும் ரொக்கம் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும், இந்த பணம் சட்டத்திற்கு புறம்பான வெளிநாட்டு கரன்சியாக இருந்தால் அமலாக்க பிரிவிற்கு தகவல் அளித்து பறிமுதல் செய்ய வேண்டும். நிலையான கண்காணிப்பு குழு, மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அல்லது உள்வட்ட சாலைகளில் சோதனை நடத்த வேண்டும். பறிமுதல் செய்யும் பொருட்கள், ரொக்க பணத்தை வீடியோ பதிவு செய்திட வேண்டும்.
 

 
இந்த பதிவை நாள்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்பித்திட வேண்டும். வீடியோ கண்காணிப்பு குழு, பொதுக்கூட்டம், பிரசாரம், பேரணிகளை பதிய வேண்டும். தேர்த ல் செலவு கண்காணிப்பு குறித்த அறிவுறுத்தலின் படி, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுரையும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஊடக மையம், வாகன தணிக்கை கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலி ஆகியோர் பார்வையிட்டு, புகார் குறித்த பதிவேட்டை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர்  கூடுதல் ஆட்சியர் ( வருமான வரித்துறை துணை இயக்குநர்  உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

மேலும் காண

Source link