KKR vs SRH Match Highlights: எடுபடாத ஸ்டார்க் பவுலிங்; மிரட்டிவிட்ட ரஸல், க்ளாசன்; KKR – SRH போட்டியில் நடந்தது என்ன?

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதாராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 204 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமானவற்றை இங்கு காணலாம்.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செயதது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 207 ரன்கள் சேர்த்தது.

குறிப்பாக கடைசி 5 ஓவரில் மட்டும் கொல்கத்தா அணி 85 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா அணி சார்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஸல் வெறும் 25 பந்தில் 3 பவுண்டரி 7 சிக்ஸர் விளாசி 64 ரன்கள் குவித்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடி 40 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் விளாசி 54 ரன்கள் சேர்த்திருந்தார்.

அண்ட்ரே ரஸல் 20 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அடிக்கப்பட்ட அரைசதங்களில் வேகமான அரைசதமாக இது பதிவாகியுள்ளது.

ஹைதராபாத் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

கொல்கத்தா அணியைப் பெறுத்தவரையில் பவர்ப்ளேவில் 3 விக்கெட்டுகளை இழந்தனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி பவர்ப்ளேவில் மட்டும் 29 விக்கெட்டுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் ஹென்ரிச் க்ளாசன் 29 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 8 சிக்ஸர் பறக்கவிட்டிருந்தார். இவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

கொல்கத்தாவின் ஹர்சித் ராணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மிட்ஷெல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட கைப்பற்றாமல் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

அதேபோல் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 412 ரன்கள் குவித்துள்ளது.

இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 29 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ளது. இதில் ஹைதராபாத் அணி 15 சிக்ஸர்களும் கொல்கத்தா 14 சிக்ஸர்களும் விளாசியது.

இரு அணிகளும் இணைந்து 25 பவுண்டரிகள் விளாசியுள்ளது. இதில் கொல்கத்தா 13 பவுண்டரிகளும் ஹைதராபாத் 12 பவுண்டரிகளும் விளாசியுள்ளது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸல்க்கு வழங்கப்பட்டது.

Source link