Kamal Hassan: | Kamal Hassan:


கமல்ஹாசன்:
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மே அல்லது ஜூன் மாதத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள்  மத்தியில் படம் பற்றி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  இதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனின் அமரன், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 ஆகிய திரைப்படங்களையும் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.
”அண்ணாத்தை ஆடுறார்”
மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குநர் லோகேஷ் நடிப்பில் ‘இனிமேல்’ எனும் ஆல்பம் பாடலும் ராஜ் கமல் நிறுவனம் சார்பில் விரைவில் வெளியாக உள்ளது.  இப்படியான நிலையில், கமல்ஹாசனை வைத்து மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ராஜபார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாஸை கொண்டாடும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன் ஆபூர்வ சிங்கீதம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், வைரமுத்து, மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இவர்களுடன், அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சியில்  நடிகர் பிரபுதேவாவின் தந்தையும் டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் கலந்து கொண்டார்.  
அப்போது, நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததும் அவருடன் சேர்ந்து ஒற்றைக்காலில் நின்றபடி மகிழ்ச்சி பொங்க போட்டோ எடுத்துக் கொண்டார்.  கமலின் ’அண்ணாத்த ஆடுகிறார்’ பாடலின் நடனத்தை போட்டப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிரமில் புகைப்படத்தை பதிவிட்ட கமல், ”அண்ணாத்தை ஆடுறார்’ அபூர்வ சங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக்காலில் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.  
விஜய், அஜித், விக்ரம்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்திற்கு கோரியோ செய்திருக்கிறார் சுந்தரன். இவர் கமலை வைத்து நாயகன், இந்தியன், அபூர்வ சகோதர்கள், புன்னகை மன்னன் உள்ளிட்ட படங்களுக்கும் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலை நினைவுக்கூறும் வகையில், அவர்கள் இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.  இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க
Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

மேலும் காண

Source link